search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஒரு ரூபாய் குறைப்பு"

    தொடர்ந்து அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல் விலையில் இருந்து லிட்டருக்கு ஒரு ரூபாய் குறைத்து கேரள அரசு இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது. #PinarayiVijayan #PetrolDiesel
    திருவனந்தபுரம்:

    இந்தியாவில் நாளுக்கு நாள் பெட்ரோல், டீசல் விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்து கொண்டே வருகிறது. கடந்த 16 நாட்களுக்கு பிறகு பெட்ரோல் மற்றும் டீசல் விலை லிட்டருக்கு தலா 1 காசு மட்டுமே நேற்று குறைக்கப்பட்டது.

    இதற்கிடையே, பெட்ரோல், டீசல் விலை உயர்வை குறைக்க மத்திய அரசு முயற்சித்து வருகிறது என மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில், தொடர்ந்து அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல் விலையில் இருந்து லிட்டருக்கு ஒரு ரூபாய் குறைத்து கேரள அரசு இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

    கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இன்று சட்டசபை கூட்டம் நடைபெற்றது. அதில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து ஆலோசனை நடந்தது. இதில், மாநில அரசு தனது விற்பனை வரியை குறைத்து கொள்வதென முடிவானது. 

    இதுதொடர்பாக கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் கூறுகையில், மாநிலத்தின் விற்பனை வரியை குறைப்பதன் மூலம் பெட்ரோல் டீசல் விலையில் ஒரு ரூபாய் குறையும். இது மக்களுக்கு ஓரளவு ஆறுதல் தரும். இந்த உத்தரவு இன்று முதல் அமலுக்கு வருகிறது என தெரிவித்துள்ளார்.

    தற்போது, கேரளாவில் ஒரு லிட்டர் பெட்ரோல் 81.40 ரூபாய்க்கும், ஒரு லிட்டர் டீசல் 74.05 ரூபாய்க்கும் விற்கப்பட்டு வருகிறது. முதல் மந்திரியின் உத்தரவை தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலையில் ஒரு ரூபாய் குறைக்கப்படுகிறது. 
    #PinarayiVijayan #PetrolDiesel
    ×